விமான நிலையத்தின் இலகுத்தன்மையால் புதிய வைரஸ் பரவும் அபாயம்

விமான நிலையத்தின் இலகுத்தன்மையால் புதிய வைரஸ் பரவும் அபாயம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் குறைந்து காணப்படுவதனால் சுகாதார பிரிவுகளை கடந்து பயணிகள் நாட்டுக்குள் நுழைய முடியும் என்றும் இதனால் ஆப்பிரிக்காவில் தற்போது அடையாளங்காணப்பட்டுள்ள அபாயகரமான புதிய கொவிட் 19 திரிபுகள் நாட்டுக்குள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கொவிட் 19 வைரஸின் பல திரிபுகள் தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் அடையாளங்காணப்பட்டுள்ளன. கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண வீதம் அதிகரிக்கும் காலப்பகுதியில் நாம் உள்ளோம். ஏற்கனவே குறித்த அபாயம் பற்றி ஏற்கனவே சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். நூற்றுக்கு 500 வீதம் வேகமாக பரவக்கூடிய வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் அடையாளங்காணப்பட்டுள்ளது. இவ்வைரஸ் குறித்து எச்சரித்துள்ள போதிலும் எம்மில் சிலர் நடந்துகொள்ளும் முறை கவலைக்குரியதாக உள்ளது.

தற்போது 7 நாடுகளில் இருந்து நாட்டுக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனூடாக வேறு நாடுகளில் இருந்து பரவுவாது என்று நாம் உறுதியாக கூற முடியாது. இந்நிலையில் எமது விமானநிலையத்தின் செயற்பாடு மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. சுகாதார செயற்பாடுகள் மிகவும் கவனக்குறைவாக நடைபெறுகிறது. சுகாதார பரிசோதனை பிரிவுக்கு வர முதல் பயணிகள் சுங்கத் திணைக்களம், குடிவரவு குடியகழ்வு திணைக்களம் என்பவற்றுக்கு சென்று, பொருட்கள் கொள்வனவு செய்த பின்னரே வருகின்றனர். இதனால் அங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் பெரும் அச்சுறுத்தல் நிலையில் உள்ளனர். இதற்கு சுகாதார நடைமுறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இலகுத்தன்மையே.

நாட்டின் அனைத்து தேவைகளையும் விட மக்களின் உயிர் பாதுகாப்பு முக்கியம் என்று நாம் உரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். எனவே மக்களின் உயிருக்கு மதிப்பளித்து வௌிநாட்டுப் பயணிகள், உல்லாசப்பிரயாணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கோருகிறோம். நாம் ஆய்வுகளுக்கமையவே செயற்படுகிறோம். எனவே ஏனைய நாடுகளைப் ​போன்றே இலங்கையிலும் பரிசோதனைகளை அதிகரித்தால் நாட்டிலும் வைரஸ்களை அடையாளங்காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image