கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேராவுக்கும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
All Stories
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனான நான்காயிரம் வீட்டுத்திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையடைவதுடன், இந்திய அரசாங்கத்தின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சபையில் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வழிகாட்டல்களுக்கமைய, சமையல் எரிவாயு கொள்கலன்களை மீண்டும் சந்தைக்கு விநியோகிக்க லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
மின்துண்டிப்பு தொடர்பான புதிய அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சியல்கோட் பகுதியில் இலங்கை பணியாளர் ஒருவர், பெருமளவானோரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யக்கோரி பெருந்தோட்ட நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
லாஹூரில் இருந்து விமானம்ஊடாக அவரது சடலம் இன்று மாலை 5மணியளவில் நாட்டிற்கு எடுத்துவரப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 13 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குஜரன்வாலாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 200 இற்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுமார் 5 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மஸ்கெலியா ப்ரட்மொர் தோட்ட தொழிலாளர்கள் நேற்று (05) காலை தோட்டத்தின் மத்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த 5 நாள்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த வட்டவளை- மவுண்ட்ஜின் தோட்ட மக்களின் பணிபகிஷ்கரிப்பு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட விடுமுறை திகதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.