ஆசிரியர் - அதிபர் சேவையை மூடிய சேவையாக பிரகடனப்படுத்த இடையூறு வேண்டாம்

ஆசிரியர் - அதிபர் சேவையை மூடிய சேவையாக பிரகடனப்படுத்த இடையூறு வேண்டாம்

ஆசிரியர் - அதிபர் சேவையை மூடிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (CTSU) அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வலியுறுத்துகிறது.

தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, மூடப்பட்ட சேவைப் பிரகடனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீண்டும் தமது தொழிற்சங்கப் போராட்டத்தை முறியடித்தால் மீண்டும் போராடத்தயார் என்று தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகளை விரைவாக தீர்க்க, மூடப்பட்ட ஆசிரியர்-அதிபர் சேவையின் அவசரத் தேவை சுட்டிக்காட்டியுள்ள மஹிந்த ஜயசிங்க, இதன் விளைவாக பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளன என்றும் கூறியுள்ளார்.

“சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மூடப்பட்ட சேவைக்கு ஆதரவாக உள்ளீர்களா என அப்பகுதியிலுள்ள அதிபர்களிடம் கேட்டிருந்தனர். ஆசிரியர் - அதிபர் சேவையை மூடிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாத நிலையில் நவம்பர் 20 ஆம் திகதி வெளியிடுவதற்கு முன்னர் இணக்கம் காணப்பட்டது. சில தொழிற்சங்கங்கள் இந்த முடிவுக்கு எதிராக இருந்தமையால் அரசாங்கம் தாமதத்திற்கான காரணத்தைக் கூறியுள்ளது” என்று ஜயசிங்க மேலும் கூறினார். இந்த தொழிற்சங்கங்கள் பல மாத போராட்டத்தின் பின்னர் பெற்ற வெற்றியை மாற்றியமைக்க முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது அரசாங்கத்தின் அனைத்து துறைகளையும் பாதிக்கும் என்று அரசாங்கம் கூறுவதாகவும், எனவே பிரச்சினைக்கு தீர்வு காண ஆசிரியர் அதிபர் சேவையை மூடிய சேவையாக பிரகடனப்படுத்துமாறு கோரியதாகவும் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image