பாடசாலையொன்றில் அனுமதியின்றி செயலமர்வை நடத்தச்சென்ற நால்வர் கைது
பதுளை – ஹாலிஎல பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் அனுமதியின்றி உளநல ஆலோசனை செயலமர்வை நடத்துவதற்கு சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 03 வோக்கிடோக்கிகள், வாயு துப்பாக்கி (Air Rifle) மற்றும் ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வளவாளர் என கூறப்படும் நபரும் அவருடன் சென்ற ஏனைய மூவரும் கறுப்பு நிற ஆடை அணிந்து, பாதுகாவலர்களுடன் வந்ததாகவும் அவர்களிடம் துப்பாக்கி காணப்பட்டதாகவும் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த செயற்றிட்டத்திற்காக மாகாண மற்றும் வலயக்கல்விப் பணிமனைகளில் எவ்வித அனுமதியும் பெற்றிருக்கவில்லை என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேபோன்று, செயலமர்வை நடத்தச்சென்ற வளவாளர் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர் இல்லை என்பதுடன், உளநல ஆலோசனை நடத்துவதற்கு தகுதியானர்கள் இல்லை எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்களையும் பதுளை நீதவான் முன்னிலையில் இன்று (02) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூலம் - நியூஸ்பெஸ்ட்