அரச ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்க இன்று நாடாளாவிய ரீதியில் போராட்டம்

அரச ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்க இன்று நாடாளாவிய ரீதியில் போராட்டம்
அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த திட்டத்தை மீளப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி சம்பள அதிகரிப்புக்கான தொழிற்சங்க ஒன்றியம் இன்று நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்களை மேற்கொள்ள உள்ளது.
 
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவைகள் அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அதிகாரிகள், சகல துறைசார் அதிகாரிகள், சிற்றூழியர்கள் தபால், புகையிரதம் உள்ளிட்ட சகல அரச ஊழியர்களும்  இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் மற்றும் சம்பளத்தை அதிகரித்துக் கொள்ளும் தொழிற்சங்க ஒன்றியம் என்பன அறிவித்துள்ளன.
 
அரச நிறுவனங்களின் முன்பாக இந்த போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
 
இது தொடர்பில் அந்த அமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
 
 258876865_449878526727963_3635483928618766764_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image