"ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லை பிரச்சினைக்கு என்ன நடக்கிறது?" என்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
All Stories
எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம்திகதியின் பின்னர், பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அத்தாட்சி அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொது இடங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் புறக்கணிக்குமாக இருந்தால் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக சுகாதார உத்தியோகத்தஸ்தர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையில் பணவீக்கம் 49% அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரபல பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹாங்க் தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று (27) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினம் நிமித்தம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் அதன் பெண் ஊழியர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
தற்போது அமுலாக்கப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வௌியிடப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனம், நேற்று (25) நள்ளிரவு முதல் பெற்றோல் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்டி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக அதிகரித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்காக மேலதிக எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்குமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் மார்ச் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.