எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று (27) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, P Q R S T U V W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணிநேர மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, P Q R S T U V W வரையான வலயங்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது மின்துண்டிப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கான எரிபொருள் தொடர்பான அறிவித்தல்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் 8.95 மில்லியன் ரூபா இழப்பீடு