தமது கோரிக்கைகளை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் புறக்கணிக்குமாக இருந்தால் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக சுகாதார உத்தியோகத்தஸ்தர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் தொற்றுநோய்ச் சூழலில் சம்பள முரண்பாடு மற்றும் பதவி உயர்வு போன்ற பல தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கடந்த பல மாதங்களாக சுகாதாரத்துறை சார்ந்த பல தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
மார்ச் மாத தொடக்கத்தில் சுகாதார அமைச்சருடன் பலச்சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் சம்மேளனம் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தது. இந்நிலையில் மீண்டும் மாகாண மட்டங்களில் போராட்டங்களை குறித்த சம்மேளனம் கடந்த வாரம் ஆரம்பித்தது.
சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் சம்மேளனம் கீழ்வரும் குற்றச்சாட்டுக்கள்/ குறைகளை முன்வைத்து மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
உறுதியளித்தவாறு அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை: சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு
அரச தாதியர் சங்கத்துக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு
தாதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி
சுகாதாரத்துறை தொழிற்சங்க நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை
சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டதில் இருந்து விலகிய தொழிற்சங்கம்!
இலங்கைத் தகுதிக் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானத்தின்படி நியமிக்கப்படவுள்ள ஆய்வுக் குழு இன்னும் ஒரு மாதமாக நியமிக்கப்படவில்லை.
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட 5/7 வருட பதவி உயர்வு முறை தொடர்பான சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அரச சேவைகள் ஆணைக்குழு இன்னும் அனுமதி வழங்கவில்லை.
சுகாதார அமைச்சின் செயலாளரும் பொதுச் சேவை ஆணைக்குழுவும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீளாய்வு செய்வதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றனர்.
பணிப்பாளர் பதவிகளை உருவாக்குவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குழுவொன்றை நியமித்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை.
தற்காலிகமாக பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் இடைநிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து அமைச்சின் செயற்பாடும் நிறுத்தப்பட்டுள்ளமையினால் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஏற்படுவதன் பொறுப்பை அமைச்சே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடந்த வாரம் கருத்து தெரிவித்த சம்மேளனத்தின் அமைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவின் புரிந்துணர்வின்மையே, சுகாதாரப் போராட்டங்களுக்கு ஒரு முக்கிய காரணியாகும்," என்று அவர் கூறினார்.
மாகாண மட்டங்களில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு உரிய பதில் கிடைக்காமல் போகும்பட்சத்தில் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் எதிர்வரும் மார்ச் 28ம் திகதி வட மேல் மாகாணத்திலும் ஏப்ரல் 5ம் திகதி மத்திய மாகாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார்.