பயிலுநர் பட்டதாரிகளை நேர்முகத்தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தல்
வேலையில்லா பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டம்- 2020இன் கீழ் இணைக்கப்பட்டவர்களை நிரந்தர சேவையில் இணைப்புத்திட்டம் 2022 இற்கான 111 கட்ட நேர்முகத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மிக விரைவில் நேர்முகத்தேர்வுக்கான திகதி அறிவிக்கப்படும் என்பதால் நேர்முகத்தேர்வுக்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கான நேர்முகத்தேர்வு தினம் மற்றும் நேரம் அறிவிக்கப்படும். மேலதிக விபரங்களை ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளமான www.psc.cp.gov.lk இற்கு விஜயம் செய்து பார்வையிட முடியும்.
நேர்முகத் தேர்விற்கு தயாராகவுள்ளவர்கள் தேவையான ஆவணங்களின் மூலப்பிரதி மற்றும் நிறுவன பிரதானியினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் மற்றும் குறித்த ஆவணங்களின் பிரதி என்பவற்றை கொண்ட கோப்பு ஒன்றை தயார் செய்து வைத்துக்கொள்ளுமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தேவையான ஆவண விபரங்கள்
1. பட்டதாரி பயிலுநர் பயிற்சிக்காக அழைக்கப்பட்ட கடிதம்/மாவட்டச் செயலகத்தினால் பயிலுநர் பயிற்சிக்காக நிறுவனமொன்றுக்கு சேர்த்துக்கொள்ளுமாறு குறிப்பிட்டு வழங்கிய கடிதம்
2. பிறப்புச்சான்றிதழ்
3. தேசிய அடையாள அட்டை
4. பெயரில் வித்தியாசமிருப்பின் அதனை உறுதிப்படுத்திய சத்திய கடிதம்
5. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த சான்றிதழ், பட்டப்படிப்பு விடயங்கள் மற்றும் பெறுபேறு விபரங்கள் அடங்கிய சான்றிதழ்.
7. பயிலுநர் பட்டதாரி காலப்பகுதியை உறுதிப்படுத்திய திணைக்கள பிரதானியினால் முன்வைக்கப்பட்ட நிறுவன பிரதிநிதியின் சான்றுபடுத்தல் மற்றும் விண்ணப்பதாரியின் விபரக்கொத்து.( இணைப்பு 1- மூலப்பிரதி மாத்திரம் போதுமானது)
8. நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்தக்கூடிய கிராம சேவகர் வழங்கும் DS4 சான்றிதழ். (மூலப்பிரதி மாத்திரம் போதுமானது)
நேர்முகத்தேர்வுக்கு தயாராக குறுகிய காலப்பகுதியே வழங்கப்படும் என்பதால் மேலே குறிப்பிடப்பட்ட கடிதம் மற்றும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு பயிலுநர் பட்டதாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.