பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப பெண் ஊழியர்கள் கௌரவிப்பு
சர்வதேச மகளிர் தினம் நிமித்தம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் அதன் பெண் ஊழியர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
எம்மிடம் அர்ப்பணிப்பும் பலமும் மிக்க பெண் ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் தினமும் எமது வெற்றிக்கு பங்களிப்பு வழங்குகின்றனர். எமது நோக்குகளை அடைவதற்கு அவர்களுடைய பங்களிப்பைப் பார்த்து நாம் வியக்கிறோம். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபமானது விசேடமாக பெண்களின் பங்களிப்பை கொண்டுள்ளது.
குறிப்பாக இலங்கையின் மிக முக்கியமான இரு பெண்களின் பங்களிப்பு இதற்குள்ளது. ஒருவர் இலங்கை மற்றும் உலக நாடுகளில் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க. அவர் மண்டபத்தின் ஸ்தாபகத் தலைவர். மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி,. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் முகாமைத்துவ தலைவர் குழாமின் தற்போதைய தலைவராக அவர் செயற்படுகிறார் என்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுனில் திஸாநாயக்க தெரிவித்தார்.