கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள இடங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு
எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம்திகதியின் பின்னர், பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அத்தாட்சி அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொது இடங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் 14.4 மில்லியன் மக்கள் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். எனினும், 7.7 மில்லியன் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த 2 வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு தொற்றுநோய் பிரிவின் பிரதம தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.
சூரியன் செய்திகள்
நாட்டின் சில பகுதிகளில் இன்று ஒரு மணிநேர மேலதிக மின்தடை
கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுமாயின் நாடு தழுவிய போராட்டம்