இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையில் பணவீக்கம் 49% அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரபல பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹாங்க் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்ட அவர், 2021 டிசம்பரில் 12% பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் தீவிரமான சூழ்நிலை என்று கூறினார். இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலர் கையிருப்பு வீழ்ச்சி போன்றவற்றால் நிலைமை மோசமடைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
இந்நிலைமையை போக்க இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டிய சிறந்த நடவடிக்கை நாணய சபையொன்றை நியமித்து அங்கீகாரம் வழங்குவதே என பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹாங்க் கருத்து தெரிவிக்கிறார்.