இன்றும், நாளையும் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய A B C D E F G H I J K L வலயங்களில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலமும் 20 நிமிடமும்,
மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.
P Q R S T U V W வலயங்களில், காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் மூன்று மணிநேரமும்,
மாலை 6மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளைய தினம் A B C D E F G H I J K L வலயங்களில் மூன்று மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வலயங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும்,
மாலை 5.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் P Q R S T U V W வலயங்களில் நாளை மாலை 3மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கான எரிபொருள் தொடர்பான அறிவித்தல்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் 8.95 மில்லியன் ரூபா இழப்பீடு