மொழித் தேர்ச்சியின்றி 850,000 ரூபா சம்பளத்துடன் தென் கொரியாவில் வேலைவாய்ப்பு
கொரிய மொழித் தேர்ச்சியின்றியே 850,000 ரூபா வரை மாத சம்பளத்துக்கு தென் கொரியாவில் பல வேலைவாய்ப்புகள் உள்ளது என்று வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாவலயில் உள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் பதிவு செய்து இவ்வேலைவாய்ப்புகளுக்காக தென் கொரியா செல்வதற்கான வாய்ப்பினை பெற முடியும் என்று நேற்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வெல்டிங், கிரைண்டிங் மற்றும் பெயிண்டிங் துறைகளில் வேலை வாய்ப்புகள் தற்போது தென் கொரியாவில் உள்ளன. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள துறைகளில் வேலை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனினும் தென் கொரியாவில் அத்துறைகளில் அதிக கோரிக்கை நிலவுகிறது.
மேற்குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த 45 வயதிற்குட்பட்டவர்கள் இவ்வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அவசியமானவர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் தொழில்நுட்பக் குழுவை அணுகினால் அவசியமான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.