வேலைவாய்ப்பினை நாடி நேற்று 119 பேர் தென்கொரியா பயணம்!

வேலைவாய்ப்பினை நாடி நேற்று 119 பேர் தென்கொரியா பயணம்!

​தென் கொரியாவில் பல்வேறு துறைகளில் பணியாற்ற தகுதி பெற்ற 119 பேர் நேற்று (07) தொழில் நிமித்தம் புறப்பட்டுச் சென்றனர்.

கடந்த 2 வருடங்களாக தொழில் நிமித்தம் செல்ல தகுதியிருந்தும் செல்ல முடியாத நிலையில் இருந்த 5800 பேரில் 119 பேர் நேற்று தென் கொரியா செல்வதற்கான வாய்ப்பினை பெற்றனர்.

எதிர்வரும் 6 மாதங்களில் ஏனையவர்களும் தொழில் நிமித்தம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொரிய தொழிவாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு நற்செய்தி!

கொரியாவில் பணியாற்றுவோருக்கான அறிவிப்பு

 குடிவரவு சட்டவிதிகள் மீறப்படுவதால் தொழில்வாய்ப்பு பங்கை இலக்கும் அபாயத்தில் இலங்கை

வௌிநாடு செல்ல வாய்ப்பினை பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்ல நேற்று இரவு விமான நிலையம் சென்றிருந்த அமைச்சர், நாட்டுக்கு அனுப்பப்படும் டொலர்களை சட்டவிரோத முறைகளில்லாம் வங்கி மூலமாக நாட்டுக்கு அனுப்பி வைத்தல் நாட்டில் நிலவும் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துபொருள் தட்டுப்பாடுகளை நீக்க முடியும் என்றும் இதன்போது அமைச்சர் சுட்டிகாட்டினார்.

தற்போது சுமார் சுமார் 23,000 இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image