தென் கொரியா மீன்பிடித் தொழிலில் வேலை வாய்ப்புக்காக 2022 இல் நடைபெறவுள்ள கொரிய மொழித் திறன் தேர்வுக்கான தேர்வுச் அனுமதி தற்போது வழங்கப்படுகிறது.
அனுமதி அட்டைகள் நேற்று (22) முதல் எதிர்வரும் 26ம் திகதி வரை ஒன்லைனில் வழங்கப்படுகிறது.
பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஊடாக வழங்கப்படும்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற உற்பத்தித் துறையில் மொழிப் புலமைப் பரீட்சைக்கான பரீட்சை வினாத்தாள்களைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
நிறக்குருடு அற்ற, இதற்கு முன்னர் சிறைத்தண்டனை, கடுமையான குற்றங்களுக்கு தண்டனை பெறாத, தென் கொரியாவில் இருந்து நாடு கடத்தப்படாத 18-39 வயதுக்கு இடைப்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அனுமதி அட்டைகளைப் பெற விண்ணப்பப் படிவம், கடவுச்சீட்டின ஸ்கேன் பிரதி, 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட 3.5 செ.மீ × 4.5 செ.மீ புகைப்படத்தின் ஸ்கேன் பிரதி மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ.10,108 செலுத்திய ரசீது ஆகியவை அவசியம்.
மீன்பிடித் தொழிலில் வேலை செய்வதற்குத் தேவையான மொழித் திறன் தேர்வு இந்த ஆண்டு ஒக்டோபர் 5 முதல் நவம்பர் 30 வரை கணினியில் நடைபெறும்.
பரீட்சை மற்றும் பரீட்சை அனுமதிச் சீட்டுகள் வழங்கல் தொடர்பான மேலதிக தகவல்களை www.slbfe.lk என்ற பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.