வாராந்தம் 250 பேர் தென் கொரிய வேலைவாய்ப்புக்கு அனுப்பப்படுவர்!

வாராந்தம் 250 பேர் தென் கொரிய வேலைவாய்ப்புக்கு அனுப்பப்படுவர்!

அடுத்த வாரம் தொடக்கம் வாரத்திற்கு 250 பேர் என்ற வகையில் கொரிய மொழி தேர்ச்சி பெற்று தொழில் வாய்ப்புக்கு தகுதி பெற்றவர்கள் தென் கொரியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் கொரிய மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் லீ தெரிவித்துள்ளார்.

தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையிலான கலந்துரையாடல் என்று நாராஹேன்பிட்டவில் அமைந்துள்ள தொழில் அமைச்சில் நடைபெற்றபோது இலங்கைக்கான பணிப்பாளர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஏற்கனவே கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் தரவுத்தளத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்குமாறும் அடுத்த வாரம் நீடிப்பது குறித்து பரிசீலிக்குமாறும் அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளதாக பணிப்பாளர் லீ மேலும் தெரிவித்தார்.

அடுத்த 10 வருடங்களில் கொரியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டி இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

கொரியாவில் பணிபுரிந்து நாடு திரும்பிய மற்றும் கொரியாவில் வேலை தேடுபவர்களுக்கான விசேட கொரிய மொழிப் பரீட்சையை துரிதமாக நடாத்துவது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்தியதுடன், கொரிய மனிதவளத் திணைக்களத்தின் இலங்கை வதிவிடத் தலைவரிடமிருந்து இது தொடர்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image