கொரியாவில் இலங்கையர்கக்கு தொழில்வாய்ப்பு- ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கொரியாவில் இலங்கையர்கக்கு தொழில்வாய்ப்பு- ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமைச்சரவை அனுமதி!

தொழில் அனுமதியின் கீழ் இலங்கையர்களை கொரிய நாட்டுக்கு தொழில்வாய்ப்புக்காக அனுப்புவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனூடாக இலங்கையர்கள் தென் கொரியாவில் 4 வருங்களும் 10 மாதங்களும் பணியாற்றும் வாய்ப்பினைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்டப்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் பணியாளர்களின் சேவைத் திறனுக்கமைவாக சேவைக் காலம் நீடிப்பது தொடர்பில் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரியாவுக்கும் இலங்கைக்குமான புரிந்துணர்வு ஒப்பந்தமானது இரு வருடங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்படுவது அவசியமாகும். இதற்கு முன்னர் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழான நடைமுறைகளின் கீழ் இருவருடங்களும் புதிய சட்டத்திட்டங்களின் கீழ் மேலும் ஒரு காலப்பகுதியும் உள்வாங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image