இலங்கையர்களுக்கு கொரியாவில் தொழில்வாய்ப்பை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய தகுதியானவர்களுக்கான தொழில் ஒப்பந்தம் தொடர்ச்சியாக கையொப்பமிடப்பட்டு வருவதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நேற்றும் (22) 200 பேர் தொழில் ஒப்பந்த்தில் கையெழுத்திட்டனர். வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர்கூடத்தில் இவ்வாறு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
தொழில்வாய்ப்புக்காக 191 பேர் கொரியாவுக்கு பயணம்
கனடாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் - அமைச்சரவை அனுமதி!
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்தல்!
கொரிய மொழித்திறன் பரீட்சைத் திகதிகளில் மாற்றம்!
மேலும் எதிர்வரும் 26 மற்றும் 27ம் திகதிகளில் 131 பேரைக்கொண்ட குழுவினர் தென்கொரியா நோக்கி பயணமாகவுள்ளனர் என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டு மாத்திரம் 3564 இலங்கையர்கள் தொழில்வாய்ப்பினை நாடி தென் கொரியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.