குடிவரவு சட்டவிதிகள் மீறப்படுவதால் தொழில்வாய்ப்பு பங்கை இலக்கும் அபாயத்தில் இலங்கை

குடிவரவு சட்டவிதிகள் மீறப்படுவதால் தொழில்வாய்ப்பு பங்கை இலக்கும் அபாயத்தில் இலங்கை

வீசா காலம் முடிவடைந்த பின்னரும் பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் தென் கொரியாவில் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றமையினால் இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொழில்வாய்ப்புப் பங்கை இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வீசா இன்றி தென் கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு னெ் கொரிய அரச இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்று பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தென் கொரியா சென்று வீசா காலம் நிறைவடைந்த நிலையில் சுமார் 2000 இலங்கையர்கள் தொடர்ந்தும் அந்நாட்டில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு அவர்கள் நாடு திரும்பாவிடின் அவர்கள் சார்பில் பிணை கையெழுத்திட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு  எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலையில் கொரிய வேலைவாய்ப்பு கிடைத்தும் போக முடியாதுள்ளமையினால் அந்நாட்டு அரசாங்கத்துடன் கலந்துரையாடி நல்லதொரு தீர்வை பெற்றுத்தருமாறு கொரிய தொலைவாய்ப்புக்காய் காத்திருப்போர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த ஒன்றியத்தின் பேச்சாளர் ரங்க கங்கபடகே கருத்து தெரிவிக்கையில், கொரிய மொழித்தேர்வு பரீட்சையில் சித்தியடைந்து தொழில் வாய்ப்பை பெற தகுதி பெற்ற 1600 பேருக்கான தொழில் ஒப்பந்தம் தற்போது வந்துள்ளன.  இந்த 1600 பேருக்கு என்ன செய்வது என்பது குறித்து அரசாங்கத்திடம் எவ்வித செயற்றிடமும் இல்லை. எமக்கு தொழில்வாய்ப்பை பெற்று தருவது தொடர்பில் கொரிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வை பெற்றுத் தருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image