பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான இரண்டு பொறிமுறைகளை பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,
All Stories
வவுனியா பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவு வைத்தியர்கள் ஐவர் உட்பட ஊழியர்கள் குழாம் இன்று (27) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வவுனியா சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
செலாவணி வீதத் தளம்பலின் அண்மைக்கால அதிகரிப்பு அடிப்படையற்றதும் ஏற்றுக்கொள்ளமுடியாததும் என மத்திய வங்கி கருதுவதாக அதன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஏனைய வழிமுறைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டு செலாவணி சந்தையில் தளம்பல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதற்குப் பின்னர் பொருத்தமான தீவிர நடவடிக்கைகளை எடுக்கும். இந்நடவடிக்கைகள், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியினை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதுடன் ஒன்றிணைந்து 2020 நவெம்பரில் அவதானிக்கப்பட்ட ஐ.அ.டொலர் ஒன்றுக்கு ரூ.185 இற்குக் கீழ் மட்டங்களை நோக்கி அடுத்துவரும் சில நாட்களினுள் ரூபா உயர்வடைவதை இயலச்செய்யும்.
கொவிட் பரவலினால் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் ஹோட்டல் துறையைச் சேர்ந்த சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார்துறை ஊழியர்களது ஓய்வு பெறும் வயதை 60 ஆக நீடிப்பதற்கு அவசியமான சட்டதிட்டங்களை உருவாக்குவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத் தலைவர்கள் நீண்டகாலம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60 வரை அதிகரித்த போதிலும், 55 வயதில் ஓய்வில் செல்ல விரும்பும் ஊழியர் ஒருவர் ஊழியர் சேமலாப (EPT), ஊழியர் நம்பிக்கை நிதிய (ETF) வைப்புக்களை பெறும் உரிமையை கொண்டுள்ளார் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய ஓய்வூதிய வயதெல்லை 60 வரை நீடிக்கப்படுமாயின்,
இன்றைய தினத்தை (21) எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தியுள்ள ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தது.
வேலைத்தளங்களில் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அங்கி (Overall Kit) வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 19ஆம் திகதி வரை விமானங்கள் தரையிறங்குவதற்கும் தரித்து நிற்பதற்குமான கட்டணங்களை அறவிடாதிருப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு மேல் மாகாணத்தில் மக்கள் நடமாடுவதை கட்டுப்படுத்த கடுமையான மட்டுப்படுத்தலை மேற்கொள்ளுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுகாதார அமைச்சைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜனவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்தை தனிமைப்படுத்துமாறும் ஏனைய மாவட்டங்களுக்கு செல்ல தடை விதிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.