மேல் மாகாணத்தை தனிமைப்படுத்துமாறு கோரிக்கை

மேல் மாகாணத்தை தனிமைப்படுத்துமாறு கோரிக்கை

ஜனவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்தை தனிமைப்படுத்துமாறும் ஏனைய மாவட்டங்களுக்கு செல்ல தடை விதிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கொவிட் 19 தொற்று அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம். பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதனால் வௌி மாகாணங்களில் உப கொத்தணிகள் ஏற்படும் ஏற்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் நத்தார் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வௌி மாவட்டங்களுக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் கொவிட் 19 தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image