கொரோனா தொற்றை பொறுத்தவரையில் அடுத்தவாரம் தீர்வுக்குரிய காலப்பகுதியாகும். ஏனெனில் வைரஸ் செயற்பாடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இப்பண்டிகைக் காலத்தில் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக ஒன்றாக கூடும் சந்தர்ப்பங்களில் கொவிட் 19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் இதனை மனதிற் கொண்டு சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். வார இறுதி நாட்களில் கொழும்பை விட்டு ஏனைய மாவட்டங்களுக்கு செல்ல முற்படுபவர்களுக்கு அண்டிஜட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.