மேல் மாகாணத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

மேல் மாகாணத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு மேல் மாகாணத்தில் மக்கள் நடமாடுவதை கட்டுப்படுத்த கடுமையான மட்டுப்படுத்தலை மேற்கொள்ளுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுகாதார அமைச்சைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பண்டிகை காலத்தையொட்டி பெருமளவிலானோர் உடைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நகரத்திற்குள் பிரவேசிப்பர் என்றும் அதேவேளை மேலும் பலர் தமது ஊர்களுக்கு செல்வதற்கு முயற்சிப்பார்களென்றும் குறிப்பிட்டுள்ள மேற்படி சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அது மிக ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் கொழும்பிலிருந்து 25 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் ஏனைய மாகாணங்களுக்கு பயணிக்கும் நிலையில் அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அபாய நிலை உருவாகியுள்ளதாகவும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image