புதிய கொத்தணிகள் உருவாகாமல் பாதுகாப்பு பொதுமக்களின் பொறுப்பு

புதிய கொத்தணிகள் உருவாகாமல் பாதுகாப்பு பொதுமக்களின் பொறுப்பு

பண்டிகைக்காலத்தில் புதிய கொத்தணிகள் உருவாகாமல் தடுப்பது பொதுமக்களின் கடமை என்று சுட்டிக்காட்டியுள்ள பொது சுகாதார பரிசோகதர் சங்கம் நாட்டை முடக்குவது நடைமுறை சாத்தயமற்றது என்றும் தெரிவித்துள்ளது.

தேசிய பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகள் குறித்து பார்க்கும் போது பொது முடக்கத்திற்கு செல்வது சாத்தியமற்றது என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றுபவர்கள் தற்போது நாடு திரும்புகின்றனர். அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் துறையென்ற வகையில் இது நாட்டுக்கு பாரிய இழப்பாகும். இந்நிலையில் நாட்டை முடக்குவதும் கட்டுப்பாடுகளை விதிப்பதும் நடைமுறை சாத்தியமற்றது.

தற்போது நாட்டில் கொவிட் 19 பரவல் படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இதனால் நாடு வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய கொத்தணிகள் உருவாகாமல் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது பொது மக்களின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image