இலங்கை வரும் பயணிகளின் தனிமைப்படுத்தல் குறித்து ஆராய நடவடிக்கை

இலங்கை வரும் பயணிகளின் தனிமைப்படுத்தல் குறித்து ஆராய நடவடிக்கை

இலங்கை வருகைத்தரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விதிமுறைகள் தளர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக்குழுவை சந்தி்த்து கலந்துரையாடவுள்ளதாக , ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் -19 நோய் கட்டுப்பாட்டு அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்

ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் தடுப்பூசிகள் தொடர்பான விஞ்ஞான தகவல்களை குழுவுடன் கலந்துரையாடவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“தடுப்பூசி போடப்பட்ட ஒருவர் பாதுகாக்கப்பட்டாலும், அந்நபரினூடாக தொற்று பரவக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். புதிய திரிபுகள் தொடர்பிலும் பரிசீலிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அவர்கள் இன்னும் முகமூடிகளை அணிந்து சமூக தூரத்தை கவனிக்க வேண்டும். புதிய மாறுபாடுகள் தொடர்பான தகவல்களையும் நாங்கள் பரிசீலிக்க வேண்டும், ”என்று டாக்டர் பெர்னாண்டோபுல்லே கூறினார், இலங்கையர்களின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முக்கிய அக்கறை.

நாட்டுக்கு வருகைத் தரும் பயணிகள் அரசினால் பராமரிக்கப்படும் இலவச அல்லது கட்டணத்துடன் கூடிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்களில் தனிமைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image