ஒரே தடவையில் செலுத்தக்கூடிய ஜோன்சன்ஸ் அண்ட் ஜோன்சன்ஸ் கொவிட் தடுப்பு மருந்தை நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்றும் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு தடுப்பூசிகள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தி வரும் நிலையில் நிறுவனங்களில் பதிவு செய்தவதற்கு பிரதிநிதிகள் கோர வேண்டும் என்றும் தடுப்பூசியை பெற பதிவு செய்வதற்கு அவசியமான தகவல்களை வழங்குமாறு பைசர் நிறுவனத்திற்கு இலங்கை மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரியுள்ளார் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் வழங்கப்படும் பைசர் கொவிட் 19 தடுப்பூசியானது இரு தடவைகள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.