8 நாட்களின் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரும், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
All Stories
நாட்டில் தற்போது நிலவும் பல பிரச்சிகைளுக்கு உனடியாக தீர்வு பெற நடவடிக்கை எடுக்குமாறு கோரி இன்று (16) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் மனுவொன்றை கையளித்தன.
இலங்கையில் டெல்டா வைரஸ் திரிபுடன் மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் விகாரமாதேவி பூங்காவுக்கு சென்று தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நிறைவடைய முன்னர் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்தான போட்டிப்பரீட்சை வர்த்மானியில் வௌியிடப்படும் என்று மத்திய மாகாண ஆளுநர் உறுதியளித்தார் என்று ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இலவச கல்வியை தனியார் மயப்படுத்தும் முயற்சிக்கு எதிராக போராடிய தொழிற்சங்கத் தலைவர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமைக்கு உலக தொழிற்சங்க சம்மேளம் எதிர்ப்பை வௌியிட்டுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்விச் சீர்த்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள், தற்காலத்துக்குப் பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை ஆதரிக்கின்றவர்களாக இருக்கக்கூடாது” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.
அரச நிருவாக சேவை தரம் 111க்கான திறந்த போட்டிப்பரீட்சையில் தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.
கொவிட் 19 பரவுவதல் தொடர்பில் பொது கரிசனை காணப்படுகிறதா என்பது சந்தேகமாகவுள்ளது. எவ்வாறு இருப்பினும் கொவிட் 19 பரவும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிபர், ஆசிரியர்கள் தற்போது முன்னெடுத்துச் செல்லும் நிகழ்நிலை (online) கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்கும் போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் நடாத்தியது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாளை (16) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு - கேப்பாபுலவு விமானப்படை தலைமையக தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பௌத்த மத தலைவர்கள் இருவர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நேற்று ஆறாவது நாளாகவும மேற்கொண்டனர்.