​கொவிட் 19 பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அபாயம் - GMOA

​கொவிட் 19 பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அபாயம் - GMOA

கொவிட் 19 பரவுவதல் தொடர்பில் பொது கரிசனை காணப்படுகிறதா என்பது சந்தேகமாகவுள்ளது. எவ்வாறு இருப்பினும் கொவிட் 19 பரவும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக் குழுக்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார.

ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த பிரசாத் கொலம்பகே தொடர்ந்து தெரிவிக்கையில், பல கொவிட் வைரஸ் திரிபுகள் நாட்டில் பல பாகங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளன. இதனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

எனவே சுகாதார அமைச்சு நாளாந்தம் நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து தொற்றாளர்களை அடையாளங்கண்டு சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும்

மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனைய சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பயனப்படுத்துகின்றனரா என்பது சந்தேகமாகவே உள்ளது. பொதுவாக பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் மறந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது.

."ஏற்கனவே தடுப்பூசி போட்ட நபர்கள் மற்றும் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி வைரஸுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். தடுப்பூசிகளிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். தடுப்பூசிகளிலிருந்து எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பை நாம் பெறவில்லை என்றால், அது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும்

எனவே நாம் தடுப்பூசி பெற்றுக்கொள்வது மட்டுமன்றி சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் கவனமாக பின்பற்ற வேண்டும் என்றும் டொக்டர் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image