தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவாறு தொடரும் போராட்டம்

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவாறு தொடரும் போராட்டம்

முல்லைத்தீவு - கேப்பாபுலவு விமானப்படை தலைமையக தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பௌத்த மத தலைவர்கள் இருவர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நேற்று ஆறாவது நாளாகவும மேற்கொண்டனர்.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து நேற்றும் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து வெளியிடுகையில், இந்த அரசு தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களை விடுவிக்காவிடின் இதனிலும் விட பாரிய செயற்பாட்டிற்கு போகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த அரசு சுகாதார வழிமுறைகளை பாவித்து மக்களின் போராட்டங்களை நசுக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். அரசாங்கம் என்ன செய்கின்றது என்று நாங்கள் பார்த்து தீர்மானம் எடுப்போம். இந்த நாட்டில் மக்கள் எங்களுக்காக போராடுகின்றார்கள். மக்களுடன் நாங்கள் இணைந்து இந்த நாட்டில் ஜனநாயகம், சுதந்திரத்தை வெல்வதற்காக போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image