நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு மனு
நாட்டில் தற்போது நிலவும் பல பிரச்சிகைளுக்கு உனடியாக தீர்வு பெற நடவடிக்கை எடுக்குமாறு கோரி இன்று (16) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் மனுவொன்றை கையளித்தன.
கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய தொழிற்சங்க தலைவர்கள, வெகுஜன அமைப்புச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்தல், வாழ்கைச் செலவு அதிகரிப்பு, சூழல் பிரச்சினை, அரச சொத்துக்கள் மற்றும் இயற்கை வளங்களை விற்பனை செய்தல், பசளை பிரச்சினை, கொத்தலாவல சட்டமூலத்தினூடாக நாட்டில் உள்ள இலவச கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்படும் முயற்சிக்கு எதிரான போராட்டங்களை முடக்க எடுக்கும் முயற்சிகளை நிறுத்தல் போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டு இம்மனு தாக்கல் செய்ய்ப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறே ஊர்வலமாக சென்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக கோஷங்களை எழுப்பிய பின்னர் மனு கையளிக்கப்பட்டது.