ஆசிரியர் சேவைக்காய் காத்திருக்கும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நற்செய்தி!
இந்த ஆண்டு நிறைவடைய முன்னர் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்தான போட்டிப்பரீட்சை வர்த்மானியில் வௌியிடப்படும் என்று மத்திய மாகாண ஆளுநர் உறுதியளித்தார் என்று ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று (15) மத்திய மாகாண ஆளுநர் மாகாண ஆளுநர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மத்திய மாகாண பாடசாலைகளில் சுமார் 4000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த ஆண்டு நிறைவுக்குள் வேலையற்ற பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் ஏற்கனவே வாய்ப்பு பெற்றுள்ள 18,000 பட்டதாரிகளை சேவையில் இணைத்தல் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடல் என்பன இரு வேறு விடயங்கள் என்பதையும் மாகாண ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மத்திய மாகாண பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை உள்வாங்கும் செயற்பாடானது முற்றுமுழுதாக எவ்வித தலையீடும் இன்றி, நியாயமான முறையில் நடைபெறும். வேலையற்ற பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்க இடமளியோம். எனவே அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் நம்பிக்கையுடன் ஒன்றிணையுமாறும் பொய்யான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது