தனிமைப்படுத்தல் என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரி இன்று அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகள் கடமையில் இருந்து விலகியுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உரிமைக்காக போராடிய ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலைய செயலாளர் தம்மிக்க முனசிங்க, ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அமைப்பாளர தென்னே ஞானானந்த தேரர் உட்பட தொழிற்சங்கத் தலைவர்கள் தற்போது இராணுவத்துக்கு பொறுப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக ஏற்கனவே ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் தாம் இன்று கடமையில் இருந்து விலகிக்கொள்வதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.