தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் கைதுக்கு உலக தொழிற்சங்க சம்மேளனம் கண்டனம்
இலவச கல்வியை தனியார் மயப்படுத்தும் முயற்சிக்கு எதிராக போராடிய தொழிற்சங்கத் தலைவர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமைக்கு உலக தொழிற்சங்க சம்மேளம் எதிர்ப்பை வௌியிட்டுள்ளது.
இலங்கையின் விவசாயிகள், மற்றும் மாணவர்களின் நியாயமான உரிமைகளுக்காக போராடிய போது கைது செய்யப்பட்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி வௌியிடுமாறு சம்மேளம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
133 நாடுகள் மற்றும் 105 மில்லியன் அங்கத்தவர்களை கொண்ட உலக தொழிற்சங்க சம்மேளனம் சனநாயக உரிமை மற்றும் தொழிற்சங்க உரிமையை முடக்கும் முயற்சியை ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.