மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் விகாரமாதேவி பூங்காவுக்கு சென்று தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ மருத்துவப்பிரிவினால் இன்று (15) 8.30 மணி தொடக்கம் 4.30 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள விஜயம் செய்பவர்கள் மேல்மாகாணத்தை வதிவிடமாக கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை கொண்டுவருமாறு இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
ஆவணங்களாக ஆள் அடையாள அட்டை, மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம் அல்லது வாக்களிப்பதற்கு கிராம சேவகர் உறுதிப்படுத்திய அடிக்கட்டை போன்றவற்றை பயன்படுத்த முடியும் என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
வேரஹேரவில் அமைந்துள்ள இலங்கை முதலாவது இராணுவ வைத்திய பிரிவு தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கல் மத்திய நிலைய நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும் பத்தரமுல்ல தியத்த உயனவில் செயற்பட்ட தடுப்பூசி வழங்கல் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு எதிர்வரும் 19ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் இராணுவ தளபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.