பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்கங்கள் - அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்

பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்கங்கள் - அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளமைகுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், மருதானை தொடக்கம் புறக்கோட்டை மற்றும் காலி முகத்திடல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லிப்டன் சுற்றுவட்டம், தெஹிவளை, கல்கிஸ்ஸ, ரத்மலானை போன்ற பகுதிகளுக்கும் ஆர்ப்பாட்ட பேரணி நகர்ந்து சென்றுள்ளது.

 

இதேவேளை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்ட கொவிட் தடுப்பு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பயன்படுத்தி பொலிஸார் தொழிற்சங்க தலைவர்கள் உட்பட செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமை மற்றும் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தமைக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ மற்றும் பிரதித் தலைவர் ஹபீப் மொஹமட் சமீன் ஆகியோர் உயர் நீதிமன்றில் இவ்வடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

காவல்துறையின் நடத்தை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக அறிவித்து உத்தரவை வழங்குமாறு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image