அரச ஊழியர்களுக்காக அரசாங்கத்திற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் விசேட அறிவித்தல்
அரச மற்றும் பகுதிநிலை அரச ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பது தொடர்பில் அரசு சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் ஏனைய பல முக்கியஸ்தர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் முக்கியமான அறிவித்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இதற்கமைய அரச மற்றும் பகுதிநிலை அரச சேவைகள் உள்ளிட்ட ஏனைய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 10,000 ரூபாவால் சம்பளம் அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக எதிர்வரும் 8ஆம் திகதி சுகயீன விடுமுறை அறிக்கையிடல் தொடர்பில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண ஆளுநரின் செயலாளர்கள், ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம், அனைத்து திணைக்களப் பிரதானிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்கு அண்மையில் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியஆராய்ச்சியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதி ஜனாதிபதி செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் ஊதியத்தை 10000 ரூபாவால் அதிகரித்தல்
ஓய்வுபெறும் வயதை 65 ஆக ஆக்கும் பிரேரனையை விலக்கிக்கொள்ளல.
அரச ஊழியர்களின் கருத்து சுதந்திரத்தை மீறும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கைகள் மீளப்பெறுதல்
அரச சேவை நாட்டுக்கு சுமை என்ற நிதி அமைச்சரின் கூற்றை வாபஸ் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது