அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட விடுமுறை திகதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 24ம் திகதி முதல் ஜனவரி 2ம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக எதிர்வரும் 24ம் திகதி முதல் 27 ஆம் வரையில் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது அந்த விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது