பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள அரச சுகாதார ஊழியர்கள்

பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள அரச சுகாதார ஊழியர்கள்

அரச சுகாதார ஊழியர்கள் நாளை (07) காலை 7.00 மணி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க அரசாங்கம் தவறியதையடுத்து இப்பணிப்பகிஷ்கர்பிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் நிறுவகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்டபோதிலும் அக்கோரிக்கைளுக்கு உரிய முறையில் பதிலளிக்க அவர் தவறியுள்ளார் என்று என்றும் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள், மருந்தாளர்கள், கதிரியக்க வல்லுநர்கள், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் குடும்ப சுகாதார அதிகாரிகள் உட்பட 16 சுகாதாராத்துறையினர் இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர்.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை மட்டும் நிவர்த்தி செய்வதால் ஏற்படும் இணையான சம்பள முரண்பாடுகளை நீக்குதல், இலங்கைத் தகைமைக் கட்டமைப்பை மீறாத வகையில் சம்பளக் கொள்கையைப் பேணுதல் மற்றும் ரனுக்கேயின் சம்பளக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல், பணியாளர் உரிமையை உறுதிப்படுத்துவது தொடர்பாக பதவிகளுக்கு பெயரிடும் சுற்றறிக்கையை வெளியிடத் தவறியமை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதலாம் வகுப்பு பதவி உயர்வு முறை தொடர்பாக சித்த மருத்துவம் மற்றும் துணை மருத்துவத் தொழில் தொடர்பான சுற்றறிக்கைகளை வெளியிடுவதில் உள்ள தாமதம், தொழில்முறை பட்டப்படிப்புக்கு பொருத்தமான சரியான சம்பள அளவை நிறுவுதல் மற்றும் பொருத்தமான பதவிகள்/வேலை வாய்ப்புகளைப் பெறுதல், அனைத்து சுகாதார நிபுணர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 'சுகாதார நிர்வாக சேவையை' செயல்படுத்துதல், சிறப்புக் கடமைப் கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரித்தல் மற்றும் சுகாதாரத் தொழில்சார் சேவைகளை மூடிய சேவைகளாக மாற்றுதல் ஆகிய ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எனினும் புற்றுநோய், மகளிர் மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் இரத்த வங்கி ஆகியவற்றின் சேவைகள் இப்போராட்டத்தினால் பாதிக்கப்படாது என்றும் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image