நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பதவி வருவதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் விசேட அவசியம் உடையவர்கள் ஆகியோரை சேவைக்கு அழைப்பதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை மீண்டும் வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் சேவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுசேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனுக்கு கடிதம் மூலம் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது, நாட்டில் கொவிட் 19 பரவல் அதிகரித்த காலப்பகுதியில், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவுக்கு சலுகை வழங்கியது. குறிப்பாக கர்ப்பிணிகளான அரச ஊழியர்கள் மற்றும் ஒரு வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள பாலூட்டும் தாய்மார் மற்றும் விசேட நோய்கள் உள்ள ஊழியர்கள் ஆகியோரை அரச சேவைக்கு அழைக்கும் போது பின்பற்ற வேண்டிய பல சலுகைகளை கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை வழங்கியிருந்தது.
அரசாங்கம் 2/2021 (v) சுற்றுநிருபத்தினூடாக வழங்கப்பட்ட சலுகைகளை 2/2021 (vi) இலக்கமிடப்பட்ட சுற்றுநிருபத்தினூடாக இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ரத்து செய்திருந்தது. இவ்வாறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டமையினால் கர்ப்பிணி அரச ஊழியர்கள், ஒரு வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் விசேட நோய்கள் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய சேவை யாப்பை தயாரிக்க வலியுறுத்தல்
நிரந்தர நியமனத்திற்காக காத்திருக்கும் பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்
பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கொவிட் மற்றும் ஒமிக்ரோன் பரவல் அதிகரித்துள்ள போதிலும் அதனைத் தடுப்பதற்கான விசேட செயற்றிட்டமெதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. இந்நிலையில் கொவிட் பரவலானது பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை கவனத்திற்கொண்டு அரச சேவையில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், ஒரு வயதுக்கு குறைந்த குழந்தைகளுள்ள பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் விசேட நோய்கள் உள்ளவர்களுக்கு 2021 10.01 திகதியிடப்பட்ட 02/2021 (v) சுற்றுநிரூபத்தினூடாக வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை
கொவிட் 19 பரவலின் போது சலுகை வழங்கப்பட்டிருந்தபோதிலும் ஒமிக்ரோன் போன்ற மிக வேகமாக பரவக்கூடிய வைரஸ் உள்ள காலப்பகுதியில் விசேடமாக கவனம் செலுத்தப்படவேணடியவர்கள் தொடர்பில் தேவையான சுகாதார பாதுகாப்பை வழங்குவது பொறுப்புள்ள அனைத்துத்துறையினருடையது பொறுப்பு என்றும் அக்கடிதத்தல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.