பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளும் உரிமையை அரசியல் யாப்பில் தடை செய்யவேண்டும் என்ற நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்துக்கு 'பொதுச்சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையம் வன்மையாக கண்டித்துள்ளது.
பொது மக்களின் வாக்குகளின்றி கட்சியொன்றுக்கு நிதி செலவிட்டதனூடாக ஆகக்கூடிய 5 வருடங்களுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர் அலி சப்ரி. தற்போதைய அரசாங்கத்தின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர் அரசியல் யாப்பை பாதுகாப்பதற்கான அதிகாரத்தை பாதுகாப்பது அவருடைய கடமை என்பதை எமது அமைப்பு நினைவூட்டுகிறது.
அவர் தடை செய்யுமாறு கூறும் எந்தவொரு தொழிலாளருக்குமான பணிப்பகிஷ்கரிப்பு செய்யும் உரிமையானது உழைக்கும் வர்க்கத்தினர் வென்றெடுத்த வரலாற்றின் மிகப் பெரிய வெற்றியாகும் என்பதனை இந்நேரம் நாம் அமைச்சருக்கு நினைவூட்டுகிறோம். உலகின் உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டத்தினால் தற்போது அவர்கள் அனுபவிக்கும் உரிமை மற்றும் வரப்பிரசாதங்கள், ஜனநாயக உரிமைகள் அனைத்தும் இரத்தம், கண்ணீர், வியர்வையினால் பெற்றுக்கொண்ட வெற்றியாகும் என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுகிறோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குறித்த உலக வெளியீடுகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 1948ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சமவாயம் இலக்கம் 87 மற்றும் 1949 நிறைவேற்றப்பட்ட 90வது இலக்க சமவாயம் ஊடாக உலக உழைக்கும் வர்க்கத்தினர் ஒன்றிணைதல் மற்றும் ஒற்றுமையாக இணைந்து போராடும் அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
1978, இலங்கை அரசியலமைப்பில் மூன்றாவது பகுதியில் 14 -1 அதிகாரத்திற்கமைவாக எந்தவொரு குடிமகனுக்கும் ஒன்றிணையும் சுதந்திரம் மற்றும் தொழிற்சங்கத்தில் இணையும் சுதந்திரம் முற்றுமுழுதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை அரசினால் நிறைவேற்றப்பட்ட 1935, 14ம் இலக்க தொழிற்சங்க சட்டத்தினூடாக தொழிற்சங்கமொன்றை அமைத்து செயற்படுத்துவதற்கான சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உலக தொழில் வர்க்கத்தினர் வென்றெடுத்துள்ள இத்தகைய வெற்றி தொடர்பாக தொழில்ரீதியாக சட்டத்தரணியாக புரிந்துகொண்டிருக்க வேண்டும் என்றபோதிலும் அதிகாரத்தினால் பார்வையிழந்த தேவையற்ற செயற்படுவதானது அவருடைய
ஒரு தொழில்முறை வழக்கறிஞராக, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் பெற்ற இத்தகைய வெற்றிகளைப் பற்றிய புரிதல் அவருக்கு இருந்திருக்க வேண்டும், ஆனால் அவர் அதிகாரத்தினால் கண்மூடித்தனமாகவும் தன்னிச்சையாகவும் இவ்வாறு கூறியிருப்பது அவருடைய ஆணவத்தை காட்டுகிறது.
21 தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளை உள்ளடக்கிய எங்கள் அமைப்பு, நீதி அமைச்சரின் அறிக்கைக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவிப்பதுடன், ஜனநாயகத்தின் பெயரால் அந்த அறிக்கையை நீக்குமாறு அமைச்சரை வலியுறுத்துகிறது. நீதி அமைச்சரின் கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு நிலையம் மேலும் கோரியுள்ளது.
பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு என்ற வகையில், குறுகிய காலமாக மக்களின் இறையாண்மையை தவறாகப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பயன்படுத்த முற்படும் இத்தகைய அமைச்சர்களின் அதிகாரபோக்குகளுக்கு எதிராக அனைத்து வகையான மனிதநேய சக்திகளையும் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
01. இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம்
02. இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் ஊழியர் சங்கம்
03. இலங்கை தோட்டச் சேவையாளர் சங்கம்
04. ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம்
05. தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம்
06. இலங்கை ஆசிரியர் சங்கம்
07. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அனைத்து ஊழியர்கள் சங்கம்
08. சுயாதீன தடாக ஊழியர்கள் சங்கம்
09. ஊடக சேவையாளர் சங்க சம்மேளனம்
10. இலங்கை நிபுணத்துவ ஊடகவியலாளர்கள் சங்கம்
11. ஐக்கிய பொது ஊழியர்கள் சங்கம்
12. රජයේ මුද්රණ ශිල්පීන්ගේ සංගමය
13. ரயில்வே தரம் பெற்ற தொழிற்சங்க கூட்டமைப்பு
14. உணவு, பானங்கள் மற்றும் புகையிலை தொழில்துறை ஊழியர் சங்கம்
15. பெண் தொழிலாளர் கூட்டுறவு சங்கம்
16. வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் சங்கம்
17. காப்பீட்டு ஊழியர் சங்கம்
18. அகில இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம்
19. டெலிகாம் டிப்ளோமாதாரிகள் அமைப்பு
20. நிலம் மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம்
21. ப்ரொடெக்ட் சங்கம்