நீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டக் கூடாரங்கள் அகற்றப்பட்டன

நீதிமன்ற உத்தரவை அடுத்து போராட்டக் கூடாரங்கள் அகற்றப்பட்டன

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த மீனவர்களின் போராட்டக் கூடாரங்கள் அகற்றப்பட்டது.

பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் குறித்த தடை உத்தரவு கட்டளை பருத்தித்துறை பொலிஸாரினால் போராட்டம் இடம்பெறும் இடத்தில் நேற்றிரவு வாசிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீனவர்களால் அகற்றப்பட்டுள்ள போதும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் இடம்பெறும் இடத்தில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் கலக தடுப்பு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேநேரம், பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் போராட்டம் முன்னெடுத்த இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா நேற்று சென்றிருந்தார்.

இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும், வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாகவும் மீனவர்களால் நேற்றுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Jaffna_fisheries01.jpg

Jaffna_fisheries02.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image