காலிமுகத்திடல் 'கோட்டாகோகம'யில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நேற்று 50 நாட்களை எட்டியுய நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன் அமைப்புக்களின் ஒன்றியம் போராட்டப் பேரணியை நடத்தியிருந்தது.
All Stories
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால், மாத்தளை மாவட்ட சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகளைக் குறைத்து திறைசேரி வௌியிட்டுள்ள ஆலோசனையினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினை காரணமாக தற்போது விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் தீர்மானம் எடுக்கவில்லை என பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுச் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக அத்தியாவசியமான குறைந்தபட்ச உத்தியோகத்தர்களை மாத்திரம் இன்று (26) முதல் பணிக்கு அழைப்பதற்கான சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வௌியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் மூலம் அதனுடனான செயற்திட்டம் வெற்றியளிக்குமேயானால், அடுத்த வருடமளவில் நாட்டின் பொருளாதாரம் மீட்சியடையும் என்று எதிர்பார்க்கமுடியும்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு முகம் கொடுப்பதற்காக நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளத்தை உடனடியாக நடைமுறையாகும் வகையில் அதிகரிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை வௌியானது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரியுள்ளது.
பரீட்சைக் கடமைகளை ஈடுபட்டுள்ள அதிபர் ஆசிரியர்களுக்கு வழங்கும் இணைப்புக் கொடுப்பனவை அதிகரிக்க பரீட்சை ஆணையாளர் நாயகம் இணக்கம் தெரிவித்துள்ளார் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தனது முகப்புத்தகத்தில் தகவல் வௌியிட்டுள்ளது.