பஸ் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிப்பு!

பஸ் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிப்பு!

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய, போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப தனியார் பேருந்து கட்டணம் 25% - 30% வரை அதிகரிக்கப்படும் என்பதுடன் புதிய பேருந்து கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையார்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்புடன், முச்சக்கர வண்டி கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும் மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 80 ரூபாவும் அறவிடப்படும் என தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிற்றுறை சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வு தொடர்பான முழு விபரம்  கீழுள்ள இணைப்பில்

இன்று அதிகாலை 3 மணியுடன் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை!
<

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image