42 ஆண்டுகளின் பின் உச்சம் தொட்டுள்ள பணவீக்கம்!

42 ஆண்டுகளின் பின் உச்சம் தொட்டுள்ள பணவீக்கம்!

இலங்கையின் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 33.80 வீதமாக அதிகரித்துள்ளது. சுமார் 42 ஆண்டுகளில் அதிகூடிய அதிகரிப்பு இதுவாகும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் இதனை நேற்று (23) அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 1980ம் ஆண்டு நாட்டின் பணவீக்கம் அதிகரித்தது. இது 32.50 வீதமாகும்.

கடந்த 1980ம் ஆண்டு மகாவெலி திட்டத்தின் போது ஏற்பட்ட செலவீனங்கள் காரணமாக நாட்டில் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தது. முன்னால் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இரசாயன உர தடை கொள்கையினால் 7 மாதங்களுக்குள் அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 2021ம் ஆண்டு தொடக்கம் நவம்பர் மாதம் 2021 காலப்பகுதியில் மகாபோக விலைச்சல் இன்மை மற்றும் நாட்டில் டொலர் பற்றாக்குறையினால் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை என்பன விலை மிக வேகமாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image