வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு முகம் கொடுப்பதற்காக நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளத்தை உடனடியாக நடைமுறையாகும் வகையில் அதிகரிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
நாளாந்தம் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு முகம் கொடுப்பதற்காக அரச ஊழியர்களை சக்திப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு நல்ல ஆட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதுடன் 100 நாட்களுக்குள் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபா அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போதைய காலத்தில் வாழ்க்கை செலவு அதிகரிக்கப்பட்டுள்ளதைக் கருதிக்கொண்டு அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
லங்காதீப