அரச ஊழியர்களுக்கு மதிப்பீட்டு தொகை வழங்கக்கூடாது - தேர்தல் ஆணைக்குழு
ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த 10,000 ரூபா மதிப்பீட்டுத் தொகையை வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணைக்குழு அரச நிருவாக, உள்நாட்டு மாகாண மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் அரச ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளதாக நிறைவேற்று அதிகாரிகளல்லாத ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த 10,000 ரூபா மதிப்பீட்டுத் தொகையையே வழங்கக்கூடாது என்று ஆணைக்குழு கோரியுள்ளது.
நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்யும் வகையில் தேர்தலை அறிவித்துள்ள இந்நேரத்தில் இவ்வாறான மேலதிக மதிப்பீட்டுக் கொடுப்பனவுகளை வழங்குவது வேட்பாளர்களை சார்பாக அமையும் என்று தேர்தலுக்குப் பின்னர் மதிப்பீட்டு கொடுப்பனவு மற்றும் வாழ்த்துச் சான்றிதழ்களை வழங்குமாறு ஆணைக்குழு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பில் கலந்துகொள்ளாத ஊழியர்களுக்கு இம்முறை சம்பளத்துடன் 10,000 ரூபா கொடுப்பனவும் வாழ்த்துக் கடிதமும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.