அவுஸ்திரேலிய பணியாளர்களுக்கு சுப செய்தி!

அவுஸ்திரேலிய பணியாளர்களுக்கு சுப செய்தி!

அவுஸ்திரேலிய ஊழியர்கள் பணி நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் தொழில் தொடர்பான மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் என்பவற்றை தவிர்க்க முடியும்.

அந்நாட்டு புதிய 'தொடர்பு துண்டிப்புக்கான உரிமை' சட்டத்திற்கமைய தொழில் தொடர்பான மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் என்பவற்றை தவிர்க்க முடியும்.

கொவிட் தொற்றானது வீட்டுக்கும் தொழிலுக்கமான இடைவௌியை குழப்பியுள்ளது. இதனால் தொழில் நிமித்தம் வரும் மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் என்பனவற்றினால் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்புதிய சட்டம் உழைக்கும் வர்க்கத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் புழக்கத்திற்கு வருமுன்னர் எமக்கு எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. பணி முடிந்து வீடு சென்று மீள மறுநாள் அலுவலகம் திரும்பும் வரை எவ்விதமான தொடர்பும் இருக்கவில்லை என்கிறார் ஸ்வின்பர்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் ஜோன் ஹொப்கின்ஸ். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. அலுவலக நேரம் தவிர்ந்தும் மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் என்பன அலுவலகம் தவிர்ந்த நேரங்களில் தொடர்பை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில் கடந்த வரும் மற்றும் அங்கு பணிபுரிவோர் 281 மணி நேரங்கள் மேலதிகமாக சம்பளம் பெறாமல் பணியாற்றியுள்ளனர். இந்நேரத்தின் மதிப்பு 130 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் (88 அமெரிக்க டொலர்கள்) ஆகும்.

 

ஐரோப்பிய மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் ஏற்கனவே இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சட்டம் முதன் முதலாக பிரான்ஸில் 2017ம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. மறு ஆண்டு ஒரு பூச்சிக்கொல்லி நிறுவன ரெண்டோகில் இனிஸியல் அதன் ஊழியரை 24 மணிநேரமும் செயற்பாட்டுடன் வைத்திருக்க வலியுறுத்தியமையினால் 60,000 யுரோக்களை அபராதமாக செலுத்தவேண்டியேற்பட்டமை குறிப்பிடத்தக்கது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image
© 2024 Wedabima.lk. All Rights Reserved
Design by Vishmitha.com