வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 63 ஆக நீடிப்பு: அதிவிசேட வர்த்தமானி
வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 வரை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபயரத்னவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது.
2023 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.