வேலையற்ற படடதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்குவது தொடர்பான பிரச்சினைக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்று ஒன்றிணைந்த சேவைகளுக்கான பணிப்பாளர் மனோஜ் அமரசிங்க உறுதியளித்துள்ளார் என்று ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
All Stories
அரசாங்க வைத்தியர்களின் அனைத்து தரங்களில் உள்ளவர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை 63ஆக அதிகரித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வௌிநாடுகளில் பணியாற்றியபோது கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியவர்களில் 142 இலங்கையர்கள் இதுவரை உயிரழந்துள்ளனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்று 6 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படாத தமிழ் மொழி மூல ஆசிரியர் உதவியாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
நேற்று (30) ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தாதிய உத்தியோகத்தர்கள் இன்றும், நாளையும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
தாதியர் சேவையில காணப்படும் பிரச்சினைகளுக்கு நாளைக்குள் (30) தீர்வு பெற்றுத் தராவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4 இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணித் துண்டுகளை எதிர்காலத்தில் பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.